பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடரும் அமெரிக்கா வெள்ளை மாளிகை!

பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடரும் அமெரிக்கா வெள்ளை மாளிகை!

Update: 2020-04-10 12:16 GMT

பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களை பின்தொடரும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இதுவரை 16 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று அமெரிக்காவில் தன அதிகமாக பரவி வருகிறது. இதுவரை 5 லட்சத்தினருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


அமெரிக்காவிற்கு ஹைட்ரோக்சிகுளோரோக்வின் மருந்தை தரவேண்டும் என டிரம்ப் வலுக்கட்டாயமாக கேட்டார். இதன் பிறகு மனிதத்தன்மையின் முறையில் அமெரிக்காவுக்கு அந்த மருந்தை இந்தியா வழங்கியது. இதனை அடுத்து 'மோடி கிரேட். ரியலி குட்' என பிரதமர் மோடியை டிரம்ப் பாராட்டினார்.

இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்பு தற்போது மிகவும் வலிமை ஆகியுள்ளது. இக்கட்டான காலங்களில் நண்பர்களுக்கு உதவி செய்தால் மேலும் நண்பர்களுடன் நெருக்கம் ஏற்படும் என டிரம்பிற்கு மோடி பதிலளித்தார்.


இந்நிலையில், அமெரிக்காவின் அலுவலகமான வெள்ளை மாளிகை தற்போது பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களை பின் தொடர ஆரம்பித்துள்ளது. வெள்ளை மாளிகை ட்விட்டர் பக்கம் அமெரிக்காவில் இருப்பவர்களை தவிர பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மட்டும் தான் பின்தொடர்வது மற்ற எந்த ஒரு உலக தலைவர்களையும் தொடரவில்லை என கூறப்படுகிறது.

Similar News