எத்தனை நீர்நிலைகள் தி.மு.க. ஆட்சியில் தூர்வாரப்பட்டன? - ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி !!

எத்தனை நீர்நிலைகள் தி.மு.க. ஆட்சியில் தூர்வாரப்பட்டன? - ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி !!

Update: 2019-07-04 07:21 GMT

கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-


வருகிற 6 -ந் தேதி முதல் பாரதீய ஜனதா உறுப்பினர் சேர்க்கை தொடங்குகிறது. மிஸ்டு கால் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். 8980808080 என்ற எண்ணை அழைத்து பாரதீய ஜனதாவில் இணையலாம்.


தமிழ்நாட்டில் கடந்த முறை 40 லட்சம் பேர் மிஸ்டு கால் மூலம் பா.ஜ.க.வில் இணைந்தனர். இந்த முறை அதைவிட அதிகம் பேர் இணைவார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் செயல்படுத்த முடியாது. மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது.


தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் நீர் நிலைகள் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டன. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை அரசியல் செய்யாமல், ஆக்கபூர்வமான அரசியல் செய்ய வேண்டும்.


குடிநீர் பிரச்சனையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. மக்களை ஏமாற்றுவதற்காகவே காலி குடங்களை வைத்து கொண்டு ஸ்டாலின் தண்ணீர் பிரச்சனை குறித்து போராட்டம் நடத்துகிறார். எத்தனை நீர்நிலைகள் தி.மு.க. ஆட்சியில் தூர்வாரப்பட்டன என்பது குறித்து ஸ்டாலின் அறிக்கை அளிக்க வேண்டும்.


இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.


Similar News