ஹிந்து மதத்தின் ஒரு கிளை தான் சைவம்! தி.மு.க-வின் பிரித்தாளும் யுக்திக்கு அன்றே பதிலளித்த தருமபுரம் ஆதீனம்!

ஹிந்து மதத்தின் ஒரு கிளை தான் சைவம்! தி.மு.க-வின் பிரித்தாளும் யுக்திக்கு அன்றே பதிலளித்த தருமபுரம் ஆதீனம்!

Update: 2020-12-21 08:46 GMT

தமிழ் கடவுள் முருகப்பெருமானை கறுப்பர் கூட்டம் இழிவுப்படுத்தியது, ஹிந்து பெண்களை விபச்சாரிகள் என்று திருமாவளவன் பேசியது, தி.மு.க தலைவர் ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரை அவமதித்தது, உதயநிதி ஸ்டாலின் பூர்ணகும்ப மரியாதையை ஏற்க மறுத்தது போன்ற சம்பவங்கள் ஹிந்துக்களை புண்படுத்தும் வகையில இருந்தது.

தொடர்ந்து ஹிந்து மத வெறுப்பை விதைக்கும் தி.மு.க மற்றும் அதனுடைய ஆதரவு இயக்கங்கள் மேல் தமிழர்கள் மிகுந்த கோவத்தோட இருக்கிறார்கள். தீபாவளிக்கு  தி.மு.க வாழ்த்து கூட கூறவில்லை என்ற விமர்சனம் இருக்கும் நிலையில் ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் என்ற நிகழ்ச்சி சென்னை சாந்தோமில் நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் பங்குபெற்று பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க ஆதரவாளரான கலையரசி திருநீறு அணிந்து ஸ்டாலின் முன்னிலையில் கிறிஸ்துமஸ் விழா மேடையில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், "ஹிந்து என்ற மதமே கிடையாது. அனைவரும் சைவர்கள் தான்.

சைவர்கள் தான் தமிழர்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள். ஹிந்து என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவதே நமக்கெல்லாம் பலவீனம். ஹிந்து என்ற வார்த்தையை கேட்டாலே உடம்பெல்லாம் எரியுது", என்று ஹிந்து மதத்தின் மீது வன்மத்தை கக்கியுள்ளார். அப்போது மேடையில் இருந்த கிறிஸ்தவ தலைவர்கள் சிரித்துக் கொண்டே கை தட்டினர்.

மு.க. ஸ்டாலினும் அவரின் பேச்சை ரசித்தபடி கேட்டுக்கொண்டிருந்தார். மத நல்லிணக்கத்தை வளர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு அனைத்து மதத்தினரையும் அழைத்து கிறிஸ்துவர்கள் ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் விழாவில் ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை விதைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Full View

சில வாரங்களுக்கு முன்பு தி.மு.க இளைஞர் அணி தலைவரும் மு.க ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலின் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

தமிழ் முறை சைவ சம்பிரதாயத்தின் தொன்மை வாய்ந்த மடமாக கருதப்படும் தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தது பலரின் புருவத்தை உயர்த்தியது. சைவ முறையின் பாரம்பரியமானது பரந்து விரிந்த ஹிந்து மதத்தின் ஒரு கிளை என்பதை மிக அழகாக ஸ்ரீலஸ்ரீ மகா சன்னிதானங்கள் பேசியுள்ளார்.

10வது ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி நிகழ்ச்சியில பேசிய தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகா சன்னிதானங்கள், "இந்தியா ஹிந்து நாடு" என்று கூறி பேச ஆரம்பித்தார். "பின்னமில்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா" என்ற பாரதியார் பாடலையும் கூறினார். "எங்கெல்லாம் வேதம் ஒலிக்கவில்லையோ அங்கெல்லாம் பிறக்க கூடாது என்பதை சைவ சித்தாந்தம் வலியுறுத்துகிறது. வேதங்களை கொண்டு தான் அனைத்து சமயங்களும் தோன்றியிருக்கிறது.

வேதம் என்ற மரத்தில் பல கிளைகள் இருக்கிறது, இலைகள் இருக்கிறது, தளிர் இருக்கிறது, பிஞ்சு இருக்கிறது, காய் இருக்கிறது, கனி இருக்கிறது. இவையெல்லாம் ஒவ்வொரு சமயங்கள். இந்த சமயங்களையெல்லாம் கொண்டு நம் நாடு சிறப்பாக இருக்கிறது", என்று குமரகுருபரர் பாடியதை நினைவு கூர்ந்தார். சைவம் என்பது ஹிந்து மதத்தில் உள்ள பல சமயங்களில் ஒன்று தான் என்பதை தெள்ள தெளிவாக ஸ்ரீலஸ்ரீ மகா சன்னிதானங்கள் கூறியுள்ளார். 


ஆனால்  தி.மு.க மற்றும் அதன் ஆதரவாளர்களோ ஹிந்து மதத்தை சைவம் வைணவம் என்று பிரிக்க வேண்டும் என்று கிறிஸ்துமஸ் விழாவில் முடிவெடுத்துவிட்டனர் போல் தெரிகிறது.

கர்நாடக மாநிலத்தின் தேர்தலின் போது  ஹிந்துக்களை பிரிக்கவேண்டும் என்று நினைத்து காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, ஹிந்துக்களை பிரிக்க நினைத்தது தவறு என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் DK சிவகுமார் கூறி பகிரங்கமாக லிங்காயத் மக்களிடம் மன்னிப்பு கேட்டதை தி.மு.க ஞாபகம் வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை.  

Similar News