விஜய் சேதுபதி படம் - வழிவிடுமா காலம்? சேரன் ஆதங்கம்!

விஜய் சேதுபதி படம் - வழிவிடுமா காலம்? சேரன் ஆதங்கம்!

Update: 2020-04-06 05:20 GMT

1990-களின் இறுதிகளில் திரையுலகில் தடம் பதித்து தனது ஆத்மார்த்தமான படைப்புகளால் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் சேரன். குடும்ப பிண்ணனி, சமூக பிரச்சனை என மக்களின் எண்ணத்தை தன் படத்தின் மூலம் பிரதிபலிக்கும் சேரன் ஆட்டோகிராஃப் படத்திற்க்கு பின்னர், முழு நேரமாக நடிப்பில் கவனம் செலுத்த, இயக்குகுனர் சேரனை மக்கள் பெரிதும் இழந்தனர். அதன் பின்னர் அவர் நடித்த படங்களும் சரியாக போகாமல், இயக்கிய படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தினை இயக்கினார்.

அந்த படம் நன்றாக இருந்த போதும் அப்படத்தினை வெளியிட யாரும் முன்வராத நிலையில் டி.டு.எச் எனும் நிறுவனத்தி துவங்கி மக்களிடத்தில் டிவிடி மூலம் நேரடியாக படங்களை கொண்டு சேர்க்கும் முயற்ச்சியில் இறங்கினார். ஆனால் அவருக்கு திரையுலகம் சரியான ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால் அந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. மேலும் அவரை நிதி நெருக்கடியில் தள்ளியது. அவரது நிதி நிலமையை உணரந்த விஜய் சேதுபதி அவருக்கு உதவும் பொருட்டு அவருக்கு தேதிகளை தருவதாக உறுதியளித்து தனக்கான கதையை உருவாக்குமாறு கூறியிருக்கிறார்.

அந்த சமயத்தில் தான் சேரனுக்கு பிக் பாஸ் வாய்ப்பு வந்துள்ளது. அதில் பங்குகொண்டவருக்கு 2000 பிறகு பிறந்தவர்களிடம் கூட நல்ல அறிமுகம் கிடைத்தது. இதனால் அவரது ரசிகர் வட்டம் பெருகியது. தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு அன்றாடம் கேள்வி எழுப்பும் ரசிகர்களுக்கு பதிலளித்து வருபவரிடம் விஜய் சேதுபதி படம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் ரசிகர் ஒருவர்.

அதற்கு "தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது.. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்.." என பதிலளித்துள்ளார்.

Similar News