கொரோனா என்ற இருள் விலக.. தேசத்தின் ஒற்றுமைக்காக கிராமங்களிலும் விளக்கேற்றிய பெண்கள்.!

கொரோனா என்ற இருள் விலக.. தேசத்தின் ஒற்றுமைக்காக கிராமங்களிலும் விளக்கேற்றிய பெண்கள்.!

Update: 2020-04-06 03:07 GMT

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா என்ற இருள் நீங்க நமது ஒற்றுமையை காட்டும் விதமாக ஞாயிறு இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வரை வீடுகளில் விளக்கு, டார்ச், மெழுகுவர்த்தி, செல்போன் லைட் போன்றவைகள் மூலம் ஒளிர விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அவரின் ஆணைக்கினங்க ஒட்டு மொத்த தேசமும் இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் தங்களின் வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகள் விளக்கு, மெழுகுவர்த்தி, செல்போன் டார்ச் மூலமாக ஒளிர செய்தனர்.

நகரங்களில் மட்டுமின்றி குக்கிராமங்களிலும் கொரோனா விழிப்புணர்வு சென்று சேர்ந்துள்ளது.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் வீட்டு வாசல் முன்பாக மக்கள் தங்களின் கைகளில் அகள் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏந்தி நின்றதை காண முடிந்தது.

அதே போன்று நல்லம்பள்ளி தாலுகா உட்பட்ட இண்டூர், பாலவாடி கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டு வாசல் முன்பாக அகல் விளக்கு ஏற்றினர்.

இதில் சிறுவர்கள், பெண்கள் உட்பட இருந்தனர். மேலும், பட்டாசு வெடித்து தங்களின் ஒற்றுமை உணர்வை இந்த தேசத்திற்கு வெளிப்படுத்தினர். 

Similar News