சொந்த நாட்டுக்கே பங்கமா..? ராகுல் பெயரை இழுத்த பாகிஸ்தான் - ஐ.நா சபை வரை சென்ற காங்கிரஸ் கட்சியின் அந்நிய நாட்டு ஆதரவு நிலைப்பாடு!

சொந்த நாட்டுக்கே பங்கமா..? ராகுல் பெயரை இழுத்த பாகிஸ்தான் - ஐ.நா சபை வரை சென்ற காங்கிரஸ் கட்சியின் அந்நிய நாட்டு ஆதரவு நிலைப்பாடு!

Update: 2019-08-28 08:52 GMT

அரசியல் சாசனம் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் உலக நாடுகளிடம் ஆதரவு திரட்ட முயன்று தோல்வியடைந்தது.


காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி கடிதம் ஒன்று எழுதி உள்ளார். இந்திய அரசு சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மீறுவதாக கூறி 18 ஐ.நா. சிறப்பு நடைமுறைகள் ஆணையாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் ராகுல் காந்தியை மேற்கோள் காட்டும் சில வரிகள் இடம்பெற்று உள்ளன.


ஜம்மு-காஷ்மீரில் "மக்கள் இறப்பதை" குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போன்ற முக்கிய அரசியல்வாதிகளால் அங்கு பிற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன, இந்த நிகழ்வுகளின் வெளிச்சத்தில் "அங்கே மிகவும் வன்முறை நடக்கிறது" என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.




https://twitter.com/ShireenMazari1/status/1166334865194831873


காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஷிரீன் மசாரி, 18 ஐ.நா. சிறப்பு ஆணையர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ராகுல் காந்தியின் கருத்துக்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீரில் மக்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டிருப்பதாகவும், வன்முறைச் சம்பவங்கள் நடப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போன்ற இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகள் ஒப்புக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.


அந்நிய நாடு ஐ.நா சபைக்கு அனுப்பிய கடிதத்தில், இந்திய அரசியல் கட்சி தலைவரை மேற்கோள் காட்டி விவரங்களை பதிவு செய்துள்ளது பலதரப்பட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Similar News