“விஷால் ஒரு புல்லுருவி, அதைப் பிடுங்கி எறிய வேண்டும்” - பாரதிராஜா ஆவேசம்!!

“விஷால் ஒரு புல்லுருவி, அதைப் பிடுங்கி எறிய வேண்டும்” - பாரதிராஜா ஆவேசம்!!

Update: 2019-06-19 05:56 GMT


நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: - 


தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது தமிழ் திரைப்பட நடிகர் சங்கமாக மாற வேண்டுமென்றால் பாக்யராஜ் தலைமையிலான அணி வெற்றி பெற வேண்டும். அதேபோன்று சவுத் இந்தியன் பிலிம் சேம்பர் என்கிற தென்னிந்திய தயாரிப்பாளர் வர்த்தக சபையை, தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் வர்த்தக சபை என மாற்றியே தீருவேன். 


நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் ஒரு புல்லுருவியாக விஷால் இருக்கிறார். அதைப் பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்து விட்டது.


இவ்வாறு இயக்குனர் பாராதிராஜா பேசினார்.


Source: https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/18161129/1246954/Bharathiraja-says-about-vishal.vpf


Similar News