மேற்கு வங்காளம் : 2021 சட்ட சபை தேர்தலுக்கு உத்வேகத்துடன் தயாராகும் பா.ஜ.க - 190 தொகுதிகள் இலக்கு.!

190 இடங்களில் ஒரு வலுவான தளத்தை உறுதிப்படுத்த முடிந்தால், வங்காளத்தில் அடுத்த தேர்தல்களில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது.

Update: 2020-07-26 07:54 GMT

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்களை பா.ஜ.க இப்போதே தொடங்கியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லியில் இது தொடர்பாகத் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் படி, 295 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபையில் சுமார் 190 இடங்களில் தனது பலத்தை பலப்படுத்திக் கொள்ளவும், திரிணாமுல் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றிபெறும் எனக் கருதப்படும் இடங்களில் வளங்களை வீணாக்கக் கூடாது என்றும் கட்சி முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

"திரிணாமூல் காங்கிரஸ், ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிறது. அக்கட்சி, மாநிலத்தில் ஆட்சியில் இருப்பதால் அந்த வாக்கு வங்கி எங்கும் செல்லாது. இவை 80-100 இடங்கள். எனவே, மிச்சமிருக்கும் 190 இடங்களில் ஆற்றலை ஒருமுகப்படுத்தி வெற்றிபெற பா.ஜ.க திட்டமிட்டுள்ளது "என்று கட்சியின் ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக, பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் மாவட்டத் தலைவர்களை அழைத்து கட்சியின் ஏற்பாடுகள் மற்றும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் உள்ள பலங்கள் மற்றும் பலவீனங்கள் குறித்து விவாதித்தார்.

"ஒவ்வொரு நாளும் நாங்கள் நான்கு சட்டமன்றத் தொகுதிகளை பற்றி விவாதிக்கிறோம்.. நாங்கள் ஜூலை 23 முதல் தொடங்கி கூச் பெஹார், அலிபூர், ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங்கை பற்றி விவாதித்து விட்டோம். நேற்று பலுர்காட், ராய்கஞ்ச், மால்டா வடக்கு மற்றும் தெற்கு கூட்டம் நடைபெற்றது. இன்று கூட்டம் ஜாங்கிபூர், பெஹ்ராம்பூர், முர்ஷிதாபாத் , கிருஷ்ணா நகர். பிரச்சினைகள் என்ன, நாங்கள் எவ்வாறு நம்மை தயார்படுத்திக் கொள்ளலாம் என்பதை நாங்கள் ஆலோசித்து வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இரண்டு அலுவலக பொறுப்பாளர்களை ஒவ்வொரு நாளும் அழைக்கிறோம். டெல்லியில் நாங்கள் அதை செய்கிறோம், இதனால் டெல்லி தலைவர்களுக்கான தனிமைப்படுத்தல் பிரச்சினை இருக்காது " என கோஷ் ANI செய்திகளிடம் கூறினார்.

குறைவான நேரத்தில் அழைக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களைத் தவிர, எம்.பி.க்களும் கருத்துக்களைக் கோருவதற்கும், அடிமட்டத்தில் கட்சியை வலுப்படுத்த பணிகளை ஒதுக்குவதற்கும் அழைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி, மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை அறிவித்த நிலையில், சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் வாக்களிக்கும் முறை மாற வாய்ப்புள்ளது.

"ஓவைசியின் கட்சி TMCயின் சிறுபான்மை வாக்குகளைப் பிரிக்கும். எனவே, 190 இடங்களில் ஒரு வலுவான தளத்தை உறுதிப்படுத்த முடிந்தால், வங்காளத்தில் அடுத்த தேர்தல்களில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது ," என்று மேலும் அந்த வட்டாரம் தெரிவித்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு மூத்த செயல்பாட்டாளர், சிறுபான்மை சமூகத்தினரையும் சென்றடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.

Source: https://www.timesnownews.com/india/article/bjp-starts-preparations-for-west-bengal-assembly-polls-sharp-focus-on-190-seats/627137

Similar News