சூரிய கதிர்களால் ஏற்படும் இந்த தோல் நோய்க்கு அற்புதமான வைத்தியம் இதுதான்!

Update: 2021-09-25 00:45 GMT

சூரிய ஒளியில் UV கதிர்கள் எனப்படும் சில தீங்கு விளைவிக்கும் கதிர்கள் இருக்கின்றன. இவை தோல் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. அவற்றில் சன்பர்னும் ஒன்றாகும். பலரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப் படுகிறார்கள். எனினும் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையான மக்கள் இந்தப் பிரச்சினையை புறக்கணிக்கின்றனர். அதிகப்படியான வெயில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கிறது மற்றும் இது தோல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். வெயிலினால் தோல் தொடர்பான சிக்கலை, நீங்கள் எதிர்கொள்ள நேரிட்டால், உடனடியாக ஒரு தோல் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள். 


சன்பர்னுக்கு சிகிச்சையளிக்க உதவும் வீட்டு வைத்தியங்கள். சன்பர்னை அகற்ற சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. ஆப்பிள் வினிகர் சருமத்தின் PH அளவை பராமரிக்கிறது மற்றும் வெயிலினால் உண்டாகும் சிக்கலை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. ஆப்பிள் வினிகரை பாதிக்கப்பட்ட பகுதியில் தெளிக்கவும். இது காய்ந்த பிறகு, தேங்காய் எண்ணெயின் சில துளிகளை அப்பகுதியில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.

ஆப்பிள் வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது, இது எரிச்சலையும் சன்பர்னையும் குணப்படுத்துகிறது. தோல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்க பேக்கிங் சோடா உதவுகிறது. குளிக்க உபயோகிக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து குளிப்பதன் மூலம், சன்பர்ன் பிரச்சினையிலிருந்து விடுபட இயலும். இந்த செயல்முறையை சன்பர்ன் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும் வரை நாள் ஒன்றுக்கு ஒரு முறை செய்யவும். 


தயிர் சருமத்திற்கு நன்மை பயக்கிறது. ஏனெனில், இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஒரு ஸ்பூன் தயிரை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். அது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் சுத்தமாக கழுவவும். பப்பாளி மற்றும் தேன் வெயில் தொடர்பான பிரச்சினையைக் குணப்படுத்த உதவுகிறது.

பப்பாளியை தேனுடன் கலந்து ஒரு பேஸ்ட் தயாரித்து, இந்த பேஸ்ட்டை சன்பர்ன் உள்ள இடத்தில் தடவவும். அது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் சுத்தமாக கழுவுங்கள். இந்த செயல்முறையை தினசரி செய்யுங்கள். பழங்காலத்திலிருந்தே சன்பர்ன் பிரச்சினையை குணப்படுத்த உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.

உருளைக்கிழங்கைப் பேஸ்ட் செய்து தோலில் தடவவும். சிறிது நேரம் கழித்து, சுத்தமான தண்ணீரில் கழுவவும். கற்றாழையில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது சன்பர்னை குணப்படுத்த உதவுகிறது. கற்றாழை ஜெல்லை சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். இந்த செயல்முறையை சன்பர்ன் நீங்கும் வரை தினசரி செய்யுங்கள். சன்பர்னுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களிலும் கற்றாழை ஜெல் உள்ளது. 

Input & Image courtesy: Logintohealth


Tags:    

Similar News