சுற்றும் பூமி அதன் சுழற்சியை நிறுத்தினால் என்ன நேரும்? ஒரு அறிவியல் பார்வை..

சுற்றும் பூமி அதன் சுழற்சியை நிறுத்தினால் என்ன நேரும்? ஒரு அறிவியல் பார்வை..

Update: 2020-04-09 01:35 GMT

பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்கள் உலகம் முடிவுக்கு வந்தால் என்ன நிகழும் என்பன போன்ற கருத்துருவாக்கத்தில் பல திரைப்படங்களை எடுத்து வருகிறது. அந்த வகையில் யாரும் எதிர்பாரா நேரத்தில் இந்த கொரானா நோய் தொற்று உலகையே அச்சுருத்தி வரும் சூழலில் உலகின் முடிவு குறித்தெல்லாம் பல்வேறு விதமான கதைகள் உலவ ஆரம்பித்திருக்கும் வேளையில். 

இவ்வாறெல்லாம் நடக்கும் சாத்தியமில்ல எனினும், ஒரு வேளை இப்படியான சூழல் ஏற்படின் என்ன நிகழும் என்கிற அறிவியல் சந்தேகத்தின் விளைவே இந்த கட்டுரை. இணைய தரவுகளின் அடிப்படையில் திரட்டப்பட்ட தகவலின் தொகுப்பு இது. 

பூமி தன் சுழற்சியை நிறுத்தினால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்கிற கேள்வியும் அதற்கான பதிலும் நம்ம வியப்பில் ஆழ்த்துகிறது.. "ஏங்க இப்படியெல்லாம் நடக்குமாங்க...?" என்று நாம் யோசித்து முடிக்கும் நொடிக்குள் எதுவும் நிகழும் சாத்தியம் நிறைந்த சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படி நடந்து விட்டால் என்ன தான் நிகழ்ந்து விடும் என்கிற அறிவியல் பார்வையே இந்த கட்டுரை.

  • அனைத்து பொருள்களும்(மனிதர்கள் உட்பட) கிழக்கை நோக்கி வெகு வேகமாக பறந்து கொண்டிருக்கும்
  • பெரும் ராட்சஷ அலைகள் பொங்கியெழும்
  • மிக வலிமையான பெருங்காற்று வீசும்
  •  பூமியில் இருக்கும் அனைத்து கடல் நீரும் ஏதேனும் இரண்டு கடல்களில் மொத்தமாக வந்து சேரும் இதனால் ஒரு தனி கண்டம் உருவாகும்
  • எரிமலை, பூகம்பம் அனைத்தும் எழத்துவங்கும்
  • பூமி இப்போதிருக்கும் வடிவிலிருந்து வட்ட வடிவை பெறும்
  •  ஒரு துருவம் பாலைவனத்தை காட்டிலும் சூடாகவும், மறுதுருவம் அண்டார்டிக்காவை காட்டிலும் குளிராகவும் இருக்கும்
  •  நிலா கீழிறங்கி பூமியில் விழக்கூடும்.. ஆனால் இவையெல்லாம் அத்தனை எளிதானதோ அல்லது விரைவானதோ அல்ல.
  • என ஆய்வுகள் சில சொல்கின்றன.  

Similar News