கட்டுகடங்காத உணர்வுகளை சரியாக கையாளும் மனிதர்கள் யார்..?

கட்டுகடங்காத உணர்வுகளை சரியாக கையாளும் மனிதர்கள் யார்..?

Update: 2020-01-15 13:16 GMT

வெற்றி பெற்றவர்களை
ஆளுமை என்கிறோம்.  பொருளாதார ரீதியாக,
பதவியின் மூலமாக, கல்வியால் ஒளிர்வதன் காரணமாக ஒரு சிலரை ஆள்பவர்கள்
என்கிறோம்.


அப்படியெனில்
எப்போதெல்லாம் பிரச்சனைகள் நேர்கிறதோ… அப்போதெல்லாம் நம்முள் எழும் கட்டுகடங்காத
உணர்வுகளை சரியாக கையாளும் மனிதர்கள்… யார்? அவர்கள் தாம் உண்மையான ஆளுமைகள். அசலான
ஆட்சியாளர்கள்.


ஒவ்வொறு பிரச்சனை
நேர்கிற பொழுதும் அதன் மூலம் நாம் வளர்வதற்கான சாத்தியங்கள் அலாதியாக உண்டு.
உதாரணமாக  நீங்கள் புதிதாக ஒரு நிறுவத்தில்
வேலைக்கு சேர்ந்திருக்கிறீர்கள். உங்கள் முதலாளி மிகவும் எரிச்சலூட்டுபவராக
இருக்கிறார் என்றால். இது சாதரணமாக கடந்து போகவேண்டிய பிரச்சனை என நீங்கள்
நினைத்தால் இது சிறிய பிரச்சனை. ‘இவர் எப்போதும் இப்படி தான் மாறப்போவதில்லை’ என
நீங்கள் உடைந்தால் அது நீண்ட கால பிரச்சனை.


இதை நீங்கள் எப்படி
வேண்டுமானலும் கையாளலாம்.


அவரை புறக்கணித்து
என் வேலையை மட்டும் செய்வேன் என்றால் – இது பிரச்சனையை மறுப்பது.


அவரை பதிலுக்கு
எரிச்சலூட்டுவேன் என்றால் – இது கோபம்


அவரை திருப்தி
படுத்த முயன்று கொண்டேயிருப்பேன் என்றால் – இது சந்தையில் பேரம் பேசுவதை போன்றது.


அய்யோ இப்படியான
ஒரு நபரோடு மாட்டி கொண்டேனே, என்னால் இவரை
மாற்றவே முடியாது – என்பது போல் புலம்பினால் – இது மனஅழுத்தம்


இதற்கு மேல்
முடியாது நான் ராஜினாமா செய்கிறேன் என்றால் – நீங்கள் தோற்றுவிட்டீர்கள்


இவர்
எப்படியிருந்தாலும் அதனால் நான் பாதிக்கப்பட போவதில்லை என் வேலையை விரும்புகிறேன்.
இவரால் ஏற்படும் பாதிப்புகளை, சவால்களை
எதிர்கொள்ள கற்று கொள்கிறேன். – என்றால் – இது ஏற்றுக்கொள்ளுதல்.


இதில் நீங்கள் எந்த
வகை…? உங்கள் பிரச்சனைகளை நீங்கள் எப்படி
கையாள்கிறீர்கள்…? உண்மையில் சரியாக
கையாளகிறீர்கள் எனில் நீங்களே சிறந்த ஆளுமை. சிறந்த ஆட்சியாளர்.


Similar News