கொரோனா தடுப்பு நடவடிக்கை, உலகமே பிரதமரை பாராட்டும் வேளையில் தாய் நாட்டை புறம் பேசும் சில எதிர்கட்சிகள்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கை, உலகமே பிரதமரை பாராட்டும் வேளையில் தாய் நாட்டை புறம் பேசும் சில எதிர்கட்சிகள்.!

Update: 2020-04-09 03:12 GMT

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தொடந்து எடுத்து வருகின்றார் என்று உலக நாட்டு தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உயிர் பலி 80 ஆயிரத்தை தொட்டு விட்டது.

அதே வேளையில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் உயிர் பலி மற்றும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மிக குறைந்த அளவே ஆகும்.

இதற்கு முக்கிய காரணம் ஆரம்பகட்டத்திலேயே நோய் தடுப்பதற்காக 21 நாட்கள் ஊரடங்கை பிறப்பித்தார்.

இதனால் மனிதர்களிடையே பரவும் நோய் தொற்று குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை ஒட்டு மொத்த உலகமும் பிரதமர் நரேந்திரமோடியை பாராட்டி வருகிறது.

உலக சுகாதார அமைப்பும் இந்தியாவை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தாய் நாட்டு உப்பை சாப்பிட்டு விட்டு தாய் நாட்டை பற்றி புறம் பேசும் சில அரசியல் கட்சிகளான காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் போன்றவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மிகவும் கொச்சை படுத்தும் விதமாக பேசி வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக, கம்யூனிஸ்ட், விசிக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் தலை காட்டுவதே அதிசயமாக இருக்கிறது.

மக்களிடையே ஓட்டு மட்டும் வாங்குவதற்கு சென்றவர்கள், தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு உள்ளது.

இதனால் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு நேரில் சென்று உணவு தானியங்கள் கூட வழங்குவதில்லை.

இதனை தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் காண முடிகிறது.

இந்த கட்சிகளுக்கு மனிதர்களின் உயிர்களை விட, ஓட்டு வங்கி அரசியலை தொடர்ந்து செய்து வருவது வாடிக்கையாகி விட்டது.

அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இலங்கை உள்ளிட்ட 30 நாடுகள் இந்தியாவிடம் இருந்து ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை கேட்டு வருகிறது.

அதிலும் பிரேசில் அதிபர் அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து லஷ்மன் உயிரை காப்பாற்றியது போன்று இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை உற்று நோக்கி வருகிறது. ஆனால் சில பேர் இந்தியாவில் இருந்து கொண்டு இந்திய நாட்டுக்கு எதிராகவே கருத்துகளை கூறி வருவது மிகவும் வருத்தம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. 

Similar News