காஷ்மீர் யாருடையது ? ஐ.நா சபையில் குட்டிக் கதை கூறி பாகிஸ்தானை ஒப்புக் கொள்ள வைத்த வாஜ்பாய்!! கைத்தட்டலால் சபை அதிர்ந்த சம்பவம்!!

காஷ்மீர் யாருடையது ? ஐ.நா சபையில் குட்டிக் கதை கூறி பாகிஸ்தானை ஒப்புக் கொள்ள வைத்த வாஜ்பாய்!! கைத்தட்டலால் சபை அதிர்ந்த சம்பவம்!!

Update: 2019-08-21 04:56 GMT


 1991- 95 காலக் கட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நரசிம்மராவ் பிரதமராக இருக்கும் போது பாஜக மூத்ததலைவர் வாஜ்பாய் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். வெளியுறவுக் கொள்கைகளில் பளிச்சென்ற திறமை வாய்ந்த வாஜ்பாயி அப்போது இந்தியாவின் பிரதிநிதியாக ஜநாசபைக் கூட்டத்துக்கு நரசிம்மாராவால் அனுப்பி வைக்கப்பட்டார்.


ஐ.நா சபையில் காஷ்மீர் பற்றிய சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது.


இந்தியாவின் பிரதிநிதியான வாஜ்பாயி தன் பேச்சை துவங்கினார்


"என் கருத்தை சொல்லும் முன், ஒரு சிறு கதையை சொல்ல விரும்புகிறேன் என்று கூறி குட்டிக் கதை ஒன்றை கூறினார்.


“ காஷ்மீர் என்ற பெயர் வர காரணமாய் இருந்த ரிஷி காஷ்யாப் காட்டினூடே சென்று கொண்டிருந்த போது ஒரு அழகிய ஏரியை கண்டார்.


ஆஹா நாம் நீராட நல்லதொரு இடம் என்று தன் உடைகளை களைந்து ஓர் ஓரமாக வைத்துவிட்டு நீராடச் சென்றார்.


திரும்பிவருகையில், அவருடைய துணிகளை யாரோ சில பாகிஸ்தானியர்கள் களவாடி சென்றிருந்தனர்."


 இப்படி சொன்னதும் பாகிஸ்தான் பிரதிநிதி எழுந்து பொய் சொல்லாதீர்கள், அந்த காலத்தில் பாகிஸ்தானே இல்லை. பாகிஸ்தானியர் எப்படி களவாடி இருக்க முடியும் என்று கூச்சலிட்டார்


உடனே நம் வாஜ்பாயி அவர்கள் சிரித்து கொண்டே, சரி, நான் சொல்ல வந்த விஷயம் முடிந்து விட்டது, விஷயத்துக்கு வருவோம்


 இன்று பாகிஸ்தானியர் சொல்கிறார்கள், காஷ்மீர் அவர்களுடையது என்று கூறினார்


 கரகோஷம் விண்ணை பிளந்தது. காஷ்மீரில் யாருக்கு உரிமை என்பது குறித்து நகைச்சுவை தளும்ப அன்று கூறிய கருத்தை பாகிஸ்தானையே ஒப்புக் கொள்ள வைத்த அந்த தலைவனின் தலைமைக் குணத்தை பாராட்டி இன்றும் நாடு முழுவதும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி மகிழ்கிறார்கள் .  


Similar News