இந்துக்கள் அரசமரத்தை ஏன் வழிபடுகிறார்கள்..? புராணமும் அறிவியலும் சொல்லும் இரகசியம்!

இந்துக்கள் அரசமரத்தை ஏன் வழிபடுகிறார்கள்..? புராணமும் அறிவியலும் சொல்லும் இரகசியம்!

Update: 2020-01-29 05:38 GMT

இந்து மதம் காலம் காலமாக பல மரங்களை தெய்வீக தன்மை கொண்டதாக கருதி வாங்கி வருகிறது.  அதில் முக்கியமான ஒன்று அரசமரம்.  அரச மரத்தை இந்துக்கள் வணங்குவதற்கான காரணம் என்ன ?


அரச மரத்தின் பட்டை  “டேனின்” “ என்கிற திரவத்தை சுரக்கிறது,
அதே நேரம் அதன் இலை சூடு செய்யப்பட்டால் காயங்களுக்கு
மருந்தாக பயன்படுத்தலாம்.  சனி கிழமைகளில் இந்த மரத்தின் கீழ் மஹாலட்சுஷ்மி இருப்பதாக ஐதீகம், சனிக்கிழமைகளில் இந்த மரத்தை வணங்கினால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும், அதற்காக இந்த மரத்தை சுற்றி சிவப்பு கயிறு மற்றும் துணியை கட்டுவது வழக்கம்.


இந்த மரத்தின் மீது அமர்ந்துதான் அனுமான் சீதை கண்டதாக புராணம் கூறுகிறது, அதனாலும் சீதை இந்த மரத்தின் கீழ் இருந்ததாலும் இந்த மரம் வழிபடப்படுகிறது.
 மேலும் இந்த மரம் மஹாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறது.  விஷ்ணு ஒரு
முறை அசுரர்கள் தேவாரங்களை வென்ற பொது இந்த மரத்தில் தான் தஞ்சம் புகுந்தார்.  பிரம விஷ்ணு சிவன் ஆகிய மூர்த்திகள் இந்த மரத்தடியில்
தான் அமர்ந்து பேசுவதாக நம்பப்படுகிறது.  மேலும்
மூதாதையர்கள் ஆன்ம இந்த மரத்தடியில் தான் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன, மேலும்
இந்த மரம் அதிகமான பிராணவாயுவை அளிக்கிறது மற்ற மரங்கள் இரவில் கரியமில வாயுவை வெளியிடும்
அனால் இந்த மரம் இரவிலும் பிராணவாயுவை வெளியிடுவதாக கூறப்படுகிறது. இந்த மரத்தில் பட்டு
பரவுகிற காற்றானது கிருமிகளை கொல்லும் தன்மை உடையது, மேலும் பேச்சு குறைபாடு, திக்கு
வாய் உள்ளவர்கள் இந்த மரத்தின் இலையில் தேன் இட்டு சாப்பிட்டு வந்தால் குணமடைவார்கள். 


இந்த
மரத்திற்கு நீர் ஊற்றுதல் வழிபடுதல் சுற்றி வருதல் போன்றவற்றை செய்தால் செல்வம் மற்றும்
மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.  அம்மாவாசை அன்று
இந்த மரத்தை வழிபடுதல் மிகுந்த பலன் அளிக்கும், இந்த பரத்தின் பால் கண் வலிக்கு பயன்படும்
இந்த மரத்தின் இருந்து கிடைக்கும் பொருட்கள் ஐம்பது விதமான நோய்களை குணப்படுத்தும்
தன்மை கொண்டது


Similar News