"இல்லை நாங்க நம்பமாட்டோம்" தேர்தல் ஆணையத்தில் தி.மு.க புகார் - தோல்வியை எதிர்கொள்ள தயாராகிறதா தி.மு.க?

Update: 2021-04-16 09:30 GMT

"தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் சம்பந்தமில்லாத ஆட்கள் நடமாட்டம் இருக்கிறது" என புலம்பும் விதமாக தி.மு.க சார்பில் தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையர் சாகுவை சந்தித்தனர்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்முடி பேசுகையில், "வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு குறித்து எங்கள் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தேர்தல் ஆணையத்துக்கும் கோரிக்கைகள் வைத்திருக்கிறார். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பல விதிமீறல்கள் நடந்து வருகின்றன.

குறிப்பாக நான் போட்டியிடும் திருக்கோவிலூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இன்று பிளஸ் டு பிராக்டிகல் தேர்வே நடைபெறுகிறது. 147 பேர் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் இருக்கிறார்கள். இது எனக்கு இன்று காலை முகவர் மூலமாக தெரியவந்தது. உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் பேசினேன். அதன் பிறகு அங்கிருந்து அவர்களை எல்லாம் வெளியே அனுப்பச் சொல்லியிருக்கிறார். இதற்கெல்லாம் யார் அனுமதி கொடுத்தது? தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது" என்றார்.

இதனை தொடர்ந்து தி.மு.க தோல்விக்கான காரணங்களை தற்பொழுதே ஓத்திகை பார்த்து வருகிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்றது.

Similar News