மக்களின் வரி மூலம் கிடைக்கும் வருமானம் எங்கே போகிறது?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி?..
லோக் சபா தேர்தல் இன்னும் மூன்று தினங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில் தி.மு.க., மத்திய பா.ஜ.க அரசை அரசை விமர்சித்தது, குறிப்பாக திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய பாஜக அரசு கடந்த பத்து ஆண்டுகளில் 10.76 லட்சம் கோடி நிதி வழங்கியிருப்பதாக கூறுவது அப்பட்டமான பொய் கணக்கு என்று அவர் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள சமூக வலைதள பக்கங்களில் பதில் அளித்து இருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, "மத்திய அரசு தமிழகத்திற்கு 1.7 லட்சம் கோடி தான் நிதி வழங்கியுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசி இருக்கிறார்.
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5.5 லட்சம் கோடி மத்திய அரசு நிதி கொடுத்துள்ளது என்பதை, முதலில் குடும்பத்திற்குள் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றும் கூறியிருக்கிறார். தமிழகத்தின் உள் கட்டமைப்பு வசதிகள், சாலை மேம்பாட்டு நிதி, ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் இவை எல்லாவற்றிற்கும் மேம்படுத்த செலவிடப்பட்ட நிதி தமிழகத்தின் செயல்பாடு திட்டங்களுக்கான மானியம் ஆகியவை எந்த கணக்கில் வைப்பீர்கள்? திமுக ஸ்டிக்கர் ஒட்ட முடியாத காரணத்தினால் இவை மத்திய அரசு வழங்கியுள்ள நிதி இல்லை என்று ஆகிவிடுமா?
தமிழகத்தில் டாஸ்மார்க் மற்றும் பல்வேறு வரிகளினால் வருமானம் கிடைக்கும் மாநிலம் முழுவதும் அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் போக்குவரத்து உள்ளீர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்துவது ஏன் மாநில அரசுக்கு கிடைக்கும் வருமானம் இங்கேதான் போகிறது" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கல்வி எழுப்பி இருக்கிறார்.
Input & Image courtesy:News