பழங்கால இருந்த அரசியலை மாற்றியமைத்திருக்கிறார் பிரதமர்.. பா.ஜ.க தலைவர் நட்டா கருத்து..
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்போது அரசியலுக்கு புதிய வரையறையை தந்து இருக்கிறார் என்று பாஜக தேசிய தலைவர் நட்டா அவர்கள் கூறியிருக்கிறார். அரசியல் வரையறை மற்றும் நடைமுறைகளை நரேந்திர மோடி அவர்கள் பழங்காலத்திலிருந்து தற்போது மாற்றி அமைப்பதற்காகவும் அவர் மேலும் குறிப்பிட்டு இருக்கிறார். பாஜக தேசிய தலைவர் நட்டா அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் அமைந்திருக்கும் புல்தானா என்று இடத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் பற்றிய இந்த ஒரு விளக்கத்தை பாஜக தேசிய தலைவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
"மக்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே ஒரு சில கட்சிகள் பழங்காலத்தில் இருந்து தற்போது வரை பார்த்துக் கொண்டு வருகிறார்கள். தேர்தல் வரும் சமயத்தில் மட்டும் அவர்கள் முன்பு தோன்றி வாக்குறுதிகளை கொடுப்பார்கள் வெற்றி பெற்றதற்கு பிறகு அதை மறந்து விடுவார்கள். முன்பெல்லாம், வெறும் கோஷங்களை எழுப்பி, வாக்குறுதிகளை அளித்து விட்டு பிறகு அதனை மறந்துவிடுவர்.
ஆனால் மோடி வந்த பிறகு, இந்திய அரசியல் என்பது, வாக்காளர்களுக்கு பொறுப்பான அரசியலாக மாறிவிட்டது. ஓட்டு வங்கி அரசியலுக்கு பதிலாக பொறுப்பு அரசியல் செய்யப்படுகிறது. இதனால், வளர்ச்சியை நோக்கி நகர ஆரம்பித்து உள்ளோம். ஐ.மு., கூட்டணி ஆட்சியில் ஊழல் செய்தார்கள். உறவினர்களை ஊக்குவித்தார்கள். பொது மக்களை மறந்து போய் இருந்தனர்" என்று பாஜக தேசிய தலைவர் நட்டா அவர்கள் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News