என் கனவு நமது கோவை.. 100 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை.. வெளியிட்ட அண்ணாமலை..
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக கோவை தொகுதியில் அதிகமான போட்டிகள் நிலவு இருக்கிறது குறிப்பாக மூன்று பெரிய கட்சிகளும் இந்த தேர்தல் களத்தில் நேரடியாக போட்டி ஈடுகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கோவை தொகுதியில் நேரடியாக ஓட்டுகிறார். இதற்காக கோயம்புத்தூர் தொகுதியில் கோவையில் 250 மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்குறுதி அளித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் கணபதி ப.ராஜ்குமாா், அதிமுகவில் சிங்கை ராமச்சந்திரன், பாஜகவில் கே.அண்ணாமலை, நாம் தமிழா் கட்சியில் கலாமணி ஜெகந்நாதன் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா். பிரதான கட்சிகளான பாஜக, திமுக, அதிமுக நேரடியாகப் போட்டியிடுவதால் கோவை தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. என் கனவு நமது கோவை என்ற தலைப்பில் கோவை மாவட்டத்திற்கான 100 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாஜக மாநில தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை அவர்கள் இன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதில், கோயம்புத்தூரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவி அலுவலகம் அமைக்கப்படும். என்ஐஏ கிளை அமைக்கப்படும். காமராஜர் பெயரில் நடமாடும் உணவகங்கள் அமைக்கப்படும். 250 மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்படும். கோயம்புத்தூரில் இருந்து ஆன்மீக தலங்களுக்கு 10 ரயில்கள் இயக்கப்படும். 4 நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும். கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை. கோவையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரித்து, காரணமானவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார்.
Input & Image courtesy: News