லோக்சபா தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி உடையும்.. பிரதமர் மோடி உறுதி..
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மகாராஷ்டிராவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும் பொழுது லோக்சபா தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி உடையும் என்று கூறியிருக்கிறார். நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருக்கும் நாந்தேட் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தன்னுடைய பிரச்சார பேச்சுகளை எடுத்துரைத்து இருக்கிறார். இது பற்றி அவர் குறிப்பிடும் போது, "நேற்று முதல் கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்கட்ட தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் ஓட்டளித்துள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளது. லோக்சபா தேர்தலில் 25 சதவீதம் இடங்களில் இண்டியா கூட்டணியினர் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி உடையும். குடியுரிமை திருத்தச் சட்டம் இல்லாவிட்டால், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சீக்கியர்களின் நிலைமை என்னவாகும். மஹாராஷ்டிரா மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல தசாப்தங்களாக காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தியது.
சோனியா, ராகுலை குற்றம் சாட்டிய பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை இழந்துவிட்டனர். எனவே ராஜ்யசபா எம்.பி., ஆகி உள்ளனர். தேர்தல் முடிவு வெளிவருவதற்கு, முன்பே காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்திய கூட்டணியின் தலைவர் யார் என்பதை சொல்ல முடியாது" என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய பிரச்சார கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
Input & Image courtesy: News