அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்ட உதயநிதி..! எங்கே தெரியுமா?
தமிழ்நாட்டில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்று பத்து ஆண்டுகள் கழித்து ஆளும்கட்சியாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. இதில் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றார். அதுமட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக சட்டமன்றத்திற்குள் எம்.எல்.ஏ-வாக நுழைந்தார். முன்னதாக தனது கணவன் மற்றும் மகன் ஆகிய இருவரும் வெற்றிபெற்றதால் திருமதி. துர்கா ஸ்டாலின் திருவல்லிக்கேணி ஸ்ரீ.பார்த்தசாரதி கோயில் அர்ச்சகர்கள் இல்லத்திற்கு சென்று ஆசி பெற்றார் .
இவ்வாறு இருக்கையில் தற்போது கொரோனா காரணமாக தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோயில்களும் ஒரு மாத காலமாக மக்களின் வழிபாட்டிற்கு அனுமதி இல்லாமல் மூடி இருக்கும் இந்த சமயத்தில் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிவாரண பொருட்களை ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் அர்ச்சகர்களுக்கு அவர்களுடைய இல்லத்தில் சென்று வழங்கினார். இந்த நிவாரண பொருட்களில் பத்து கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் இதில் வழங்கப்பட்டது .
தன்னை ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவே அறிவித்து "பிள்ளையாரை வெறும் களிமண் அது தண்ணீரில் கரைந்து விடும்" என்று கேலி பேசிய உதயநிதி தற்போது அர்ச்சர்கர்களுக்கு வீடு தேடி வந்து நிவாரண பொருள்கள் வழங்குவது வெறும் வாக்கு வங்கி அரசியலாகவே பார்க்க தோன்றுகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.