பல முறை அமைச்சராக இருந்தவருக்கு சென்னையின் பூகோளம் கூட தெரியாத கொடுமை!

Update: 2021-07-23 03:05 GMT

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ள நிலையில், சென்னையில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 160 என அமைச்சர் கே.என்.நேரு உளறியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் உள்ளாட்சி தேர்தல் பணிகளின் நிலைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் சென்னையில் உள்ள 160 வார்டுகள் என்று ஆரம்பித்த நிலையில், அதிகாரிகள் திருத்தியதும் 200 வார்டுகள் என்று தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. அதில் 80 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநகராட்சியிலும் எவ்வளவு வட்டங்கள் இருக்கிறது, அந்த வட்டங்களில் சம அளவில் வாக்குகள் இருக்கிறதா? என்பதைப் பார்க்க வேண்டும். மாநகராட்சி வார்டில் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் வாக்குகள் இருக்க வேண்டும். இதில், ஊருக்கு தகுந்த மாதிரி பிரித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தி.மு.க தேர்தல் அறிக்கையில், புதிய மாநகராட்சி, நகராட்சிகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக எத்தனை மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்படும் என்பதை முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார்.

மேலும் சென்னையில் உள்ள மக்கள் தொகையே 80 லட்சமாக உள்ள நிலையில், 80 லட்சம் வாக்காளர்கள் கொண்ட சென்னை என்று இடையில் கூறி அதிர வைத்தார்.

Similar News