பொய் சொல்லி கையும் களவுமாக மாட்டிய ஜோதிமணி எம்.பி - வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ் - நடந்தது என்ன?

Update: 2021-09-19 05:51 GMT

கரூர் பாராளுமன்ற எம்.பி ஜோதிமணி எம்.பி பெரியார் திடலில் பேசிய பேச்சு ஒன்றில் அப்பட்ட பொய்களை பேசியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் லக்‌ஷ்மண ஐயர் குறித்து பேசும்போது அவரின் தந்தை பெயரை கிருஷ்ணசாமி ஐயர் என தவறாக தெரிவித்துள்ளார். அவரது தந்தையின் பெயர் சீனிவாச ஐயர். தொடர்ந்து பேசும் போது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான விடுதி ஒன்றை சீனிவாச ஐயர் துவங்கியதால் அவர் சார்ந்த பிராமண சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார் என்றும் கதை அளந்து விடுகிறார்.

அதனால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மண ஐயர் இந்த துயரத்தை ஜோதிமணியிடம் சொன்னதாகவும். அவர்கள் நடத்திய வங்கியில் இருந்து முதலீடுகளை எல்லாம் ஆதிக்கச்சாதியினர் திரும்பப்பெற்றதால் லக்‌ஷ்மண ஐயர் குடும்பத்தினர் நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக சொல்கிறார்.

ஆனால் உண்மையில் நடந்ததோ கே.கே.எஸ்.சுப்பணக் கவுன்டருக்கு எதிராகப் சீனீவாச ஐயர் தேர்தலில் போட்டியிட்டதால் ஆத்திரமடைந்தோர் அவரது வங்கியில் செய்த முதலீடுகளை திரும்பிக் கேட்டதால் சொத்தை விற்று நடு வீதிக்கு வந்தது லக்‌ஷ்மண ஐயர் குடும்பம். இதை செய்தது ஜோதிமணியின் சமூகத்தை சேர்ந்த அப்பகுதி கவுண்டர் சமூகத்தினர் என்பது தெளிவாகிறது. ஆனால், இதை சமூக நீதிக்காக பாடுபட்டதால் ஒடுக்கப்பட்டனர் என திரிப்பது ஏன் என ட்விட்டர்வாசிகள் ஜோதிமணியிடம் சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜோதிமணி அவர்கள் பொய் சொல்லி கையும் களவுமாக மாட்டிக்கொள்வது இது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News