தில்லுமுல்லு, கள்ள ஓட்டு'ன்னா அது தி.மு.க'தான் - பங்கம் செய்த எடப்பாடி !

Update: 2021-09-24 02:45 GMT

"நான்கு ஆண்டுகள் இரண்டு மாத காலம் நான் முதலமைச்சராக இருந்தேன். நான் நினைத்திருந்தால், தி.மு.க'வினர் மீது எவ்வளவோ வழக்குகளைப் போட்டிருக்க முடியும். நாங்கள் செய்தோமா?" என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை வழங்கினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, "எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ... அப்போதெல்லாம் தேர்தல் அறிக்கை வெளியிடுவது தி.மு.க'வின் பழக்கம். தேர்தலுடன் அந்த அறிவிப்புகள் முடிந்துவிடும். கடைசி வரை நடைமுறைப்படுத்தவே மாட்டார்கள். அரசு செயல்படுவதைப்போல் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் வாயிலாக நாள்தோறும் பொய்யான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க'வினர் தில்லுமுல்லு செய்வதில் திறமையானவர்கள். கள்ள ஓட்டுப் போடுவதிலும் திறமையானவர்கள். அவர்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார்.

மேலும் பேசிய அவர், "கடந்த நான்கு மாத கால ஆட்சியில் சொல்லும்படியாக ஒரேயொரு பெரிய திட்டம்கூட கொண்டுவரப்படவில்லை. இவர்களின் நோக்கம், அ.தி.மு.க'வினர் மீது பொய் வழக்குப் போடுவது, முன்னாள் அமைச்சர்களைப் பணி செய்யவிடாமல் ரெய்டு நடத்தி அச்சுறுத்துவது, அ.தி.மு.க'வுக்கு எதிராக அவதூறு செய்வதுதான். மக்களைப் பற்றி சிந்திக்காமல் ஆட்சி செய்கிறார் ஸ்டாலின். நான்கு ஆண்டுகள் இரண்டு மாத காலம் நான் முதலமைச்சராக இருந்தேன். நான் நினைத்திருந்தால், தி.மு.க'வினர் மீது எவ்வளவோ வழக்குகளைப் போட்டிருக்க முடியும். நாங்கள் செய்தோமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


Source - Junior Vikatan

Similar News