அப்பாயின்ட்மெண்ட் கேட்ட பி.டி.ஆருக்கு உடனே வழங்கிய நிர்மலா சீதாராமன் - "மேன் மக்கள் மேன்மக்களே!"

Update: 2021-10-02 07:30 GMT

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு உடனடியாக நேரம் வழங்கி உத்தரவிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்காக 65 கோடி ரூபாய் செலவில் 243.48 சதுர மீட்டர் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. சிகரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த குடியிருப்பு வளாகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வியாழக்கிழமை மாலை திறந்து வைத்தார். இதற்காக சென்னை வந்திருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க நேர அனுமதி கேட்டு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அனுமதி கேட்டிருந்தார்.

உடனே அனுமதியளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பி.டி.ஆரையும் சந்தித்து பேசினார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "நிர்மலா சீதாராமன் சென்னையில் இருப்பதை நான் அறிந்து கொண்டதும், அவரை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டேன். அவரும் உடனடியாக மிகவும் தன்மையோடு நேரம் வழங்கினார்" என குறிப்பிட்டுள்ளார்.

Twitter


Similar News