"மத்திய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்" - மத்திய அரசை பாராட்டிய ஸ்டாலின் !

Update: 2021-10-02 08:04 GMT

பிரதமர் மோடியின்  "துாய்மை இந்தியா திட்டம்" ஒரு மிகப்பெரிய வெற்றி திட்டமாகும். இதன்  இரண்டாம் கட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று டில்லியில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  மத்திய அரசை  பாராட்டி பேசினார். 

அவர் கூறியதுயாவது : கொரோனா பெருந்தொற்றை வென்று, அனைத்து மாநிலங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. தமிழகமும் தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. துாய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ருத் திட்டங்களின் இரண்டாம் கட்ட பணிகளை வரவேற்கிறேன். 

நாட்டில் நகரமயமாக்கல் வேகமாக நடந்து வரும் நிலையில், இதுபோன்ற திட்டங்கள் தேவையானவை. இந்தியாவில் அதிக நகரமயமாகிய மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. மேலும் நகர்ப்புற மேம்பாட்டில் முன்னோடியாக விளங்கும் தமிழகம், கழிப்பறை வசதி மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை பெருமளவு மேம்படுத்தி உள்ளது.

கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் புதுமையான திட்டங்களையும், தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வரும் 2031ம் ஆண்டை எண்ணத்தில் வைத்து, தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.மக்கள் வாழ, நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்த, மத்திய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.

என மத்திய அரசு கொண்டு வரும் இத்திட்டத்தை பாராட்டி பேசினார்.

Image : The Indian Express.

Dinamalar

Similar News