நிவாரணம் வாரி வழங்கும் பா.ஜ.க கூட்டணி புதுச்சேரி அரசு ! - தண்ணீரை கூட வடிய வைக்க வழியின்றி நிற்கும் தி.மு.க அரசு !

Update: 2021-11-23 10:00 GMT

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் கூடுதலாக மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் மழை வெள்ள நிவாரணமாக ரூ.5000 வழங்க உத்தரவிட்டுள்ளது புதுச்சேரியில் ஆளும் பா.ஜ.க கூட்டணி அரசான ரெங்கசாமி தலைமையிலான அரசு.


வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகர சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை தண்ணீர் தேங்கி வெள்ளக்காடானது. புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகள், குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்து உள்ளன.

இந்த பாதிப்பை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க கூட்டணி அரசான ரெங்கசாமி தலைமையிலான அரசு அனைத்து சிவப்பு கார்டுதாரர்களுக்கும் வெள்ள நிவாரண தொகையாக ரூ.5000 வழங்கியது. தற்பொழுது அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு தற்போது அனைத்து மஞ்சள் கார்டுதாரர்களுக்கும் நிவாரணம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, புதுச்சேரியில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் மழை வெள்ள நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுபோக ஏற்கனவே அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடியவைக்கவில்லை என மக்கள் போராடுவது குறிப்பிடதக்கது.


Source - Maalai malar

Similar News