"காய்கறி வாங்க லோன் குடுங்க" - மேட்டுப்பாளையத்தில் வங்கிமுன் ஆர்ப்பாட்டம் !

Update: 2021-11-26 09:15 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காய்கறி வாங்க கடன் கேட்டு வங்கியின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவில் காய்கறி வாங்க கடன் வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர். இதுகுறித்து அவர்கள் பேசிய போது, 'மேட்டுப்பாளையம் உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களுக்கு அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைகள் மற்றும் சிறு வியாபாரங்கள் செய்து அதில் கிடைக்கும் சிறு வருவாயைக் கொண்டு அவர்களது குடும்பங்களையும் குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார்கள். 

இந்த நிலையில் ஏழை எளிய கூலி தொழிலாளர்களின் தலையில் விழுந்த பெரும் இடியாக, தக்காளி உள்ளிட்ட காய்கறி மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் கடும் விலை ஏற்றமாக உள்ளது.

எனவே தக்காளி போன்ற ஊட்டச்சத்தான உணவுப் பொருட்களை வாங்கி கொடுப்பதற்கு தயவுகூர்ந்து தங்கள் வங்கியில் இருந்து ரூபாய் 20,000 கடனுதவி வழங்கி உதவி செய்யுமாறு வேண்டுகிறோம். இந்தக் கடனை வட்டியுடன் மாதம் மாதம் சிறுக சிறுக கடனை அடைத்து விடுவதற்கும் தயாராக உள்ளார்கள் ஏழை, எளிய தொழிலாளர்கள்" என சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் கூறினர்.

Source - Asianet NEWS

Tags:    

Similar News