மத மாற்ற வியாபாரிகளுக்கு செக் வைத்த கர்நாடக பா.ஜ.க அரசு - மத மாற்ற வழக்கில் ஜாமீன் கூட கிடையாது!

Update: 2021-12-22 10:30 GMT

இனி கர்நாடக மாநிலத்தில் மத மாற்ற வியாபாரம் நடைபெற முடியாத அளவிற்கு ஆளும் பா.ஜ.க அரசு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிரடியாக மசோதா'வை நிறைவேற்றி உள்ளது.

கர்நாடகத்தில் கட்டாய மத மாற்றத்தை தடுக்கவும் அதனை வளரவிடாமல் செய்யவும் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசு மதமாற்ற தடை சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகல் போன்றவற்றை கிழித்து எறிந்துள்ளனர்.

கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்ட மசோதாவின் முக்கிய அம்சங்களாக

* ஒருவரை கட்டாயப்படுத்தி மதம் மாற்ற கூடாது.

* அப்படி சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் சிறையும் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

* கட்டாய மதம் மாற்றம் செய்பவர்கள் ஜாமீனில் வெளி வராதபடி வழக்கு பதிவு செய்யப்படும்.

* ஒரு மதத்தை மற்றொரு மதத்துடன் ஒப்பிட்டு இழிவுபடுத்த கூடாது.

* கல்வி, இலவசம், வேலை ஆகியவற்றை ஆசை காட்டி மதம் மாற்ற கூடாது.

* 2 பேருக்கு மேல் கூட்டமாக மதம் மாற்றுவது சட்ட விரோதம்.

மதம் மாற விரும்புபவர்கள் மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் 30 நாட்கள் முன்பாக முன் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் உடனே கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது.

Source - Asianet NEWS

Similar News