பொங்கல் பணம் போச்சு! குடும்பத்தலைவி உதவித்தொகையாவது வருமா? - தி.மு.க வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த பெண்மணிகள் !

Update: 2021-12-24 02:00 GMT

தி.மு.க அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் ரொக்க தொகையும் இல்லை, குடும்ப தலைவிகளுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் செயல்படுத்தவில்லை என்ற கோபத்தை தமிழகத்தில் பல பெண்மணிகளிடம் காண முடிகிறது.

தி.மு.க ஆட்சிக்கு வரும் முன் என்ன தோன்றியதோ அதெல்லாம் வாக்குறுதிகளாக அளித்து வந்தது, அந்த வகையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்குவோம் என கூறினார் அப்போதைய எதிர்கட்சி தலைவரும் தற்பொழுதைய முதல்வருமான ஸ்டாலின். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் அதைப்பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை.

அதேபோல் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க அறைகூவல் விடுத்தார் ஆனால் தற்பொழுது முதல்வர் முந்தைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய 2500 ரூபாய் கூட இல்லை என கைவிரித்துவிட்டார் தற்பொழுதைய முதல்வர் ஸ்டாலின்.

எப்படியாவது முதல்வர் பொங்கல் பணம் குடுத்துவிடுவார் என எதிர்பார்த்து காத்திருந்த பெண்களை நேற்றை தி.மு.க அரசின் அறிவிப்பால் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். நேற்று தி.மு.க அரசு பொங்கல் பரிசுப்பை குறித்த அறிவிப்பை சுற்றறிக்கையுடன் கூட்டுறவு சங்க பதிவாளர்களுக்கு அனுப்பியது அதில், "கட்டுப்பாட்டு அறை அமைத்து தொடர்பு அலுவலரை நியமித்து பொங்கல் பரிசுத் தொகுப்பினை நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தது. 5000 ரூபாய் வழங்க வேண்டும் என கடந்த ஆட்சியில் கூறிய ஸ்டாலின் அரசு இந்த ஆட்சியில் ரொக்கத்தொகை என்ற வார்த்தையையே அகற்றியுள்ளது.


Source - Maalai malar

Similar News