"ஏன் உதயநிதி கூட்டத்துக்கு கொரோனோ வராதா?" - தி.மு.க'வை விளாசும் டி.டி.வி.தினகரன் !
"ஏன் உதயநிதி கூட்டத்தில் கொரோனோ பரவாதா?" என ஆளும் தி.மு.க அரசுக்கு டி.டி.வி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனோ'வை காரணம் காட்டி தி.மு.க அல்லாத மற்ற கட்சிகள் விழாவிற்கு ஆளும் தி.மு.க அரசு தடை விதித்து வருகிறது. இதனை குறிப்பிட்டு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான் பரவும் என்று தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களா?
இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது ; மக்களைப் பற்றி கவலையும் கிடையாது! 'தீய சக்தி கூட்டம்' என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்?" என டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டுள்ளார்.