ஏரியா 'உதயா நகர்' - பிள்ளைக்கு பெயர் 'இன்பநிதி' - தி.மு.க அமைச்சர்களையே டரியலாக்கும் திடீர் நகர் !

Update: 2021-12-30 10:15 GMT

ஏரியா பெயர் உதயா நகர், குழந்தைக்கு வச்ச பெயர் இன்பநிதி என அறிவாலய சீனியர் தி.மு.க'வினரே கலகலக்கும் அளவிற்கு கோவை மாவட்டத்தில் புதிதாக ஓர் நகர் உருவாகியுள்ளது.


கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் 'உதயா நகர்' என்று ஏரியா'வை குறிக்கும் விளம்பர பலகை இடம்பெற்ற புகைப்படம் ஒன்று வலம் வந்தது. இதுகுறித்து தற்பொழுது செய்திகள் வந்துள்ளது.


அதாவது கோவை மாவட்டம், தோலாம்பாளையம் ஊராட்சியில், சீக்குளி எனும் பழங்குடி கிராமம் உள்ளது. அங்குதான் இந்த 'உதயா நகர்' திடீரென உதயமாகயிருக்கிறது. இது குறித்து தோலாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா செந்தில் கூறியதாவது, "முதல்வர் ஸ்டாலின் சீக்குளி 7 வது மற்றும் 8 வது வார்டு மக்களுக்கு பட்டா கொடுத்தார் அதனால அவர் பேர வைத்துவிட்டோம்" என்றார்.

இது மட்டுமல்லாமல் அந்த ஏரியாவில் ஒரு குழந்தைக்கு இன்பநிதி பெயரையும் வைத்துள்ளனர். அடுத்ததாக உதயநிதி அமைச்சராக வேண்டும், முதல்வராக வேண்டும் என கூறி வலம் வரும் அமைச்சர்களையே தூக்கி சாப்பிட்டு விட்டனர் இந்த பகுதி தி.மு.க'வினர். ஜால்ரா அடிப்பதற்கும் கூட போட்டியா?


Source - Junior Vikatan

Similar News