புத்தாண்டை கொண்டாட இத்தாலிக்கு கிளம்பிய ராகுல் !

Update: 2021-12-30 10:15 GMT

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி'யுமான ராகுல் காந்தி நேற்று விடுமுறை பயணமாக இத்தாலி நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.


பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது, இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி'யுமான ராகுல் காந்தி இத்தாலி நாட்டிற்கு விடுமுறை கழிக்க நேற்று புறப்பட்டு சென்றார். கத்தார் வழியாக தோஹா சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜனவரி 15'ம் தேதி வரை அவர் இத்தாலியில் தங்கியிருப்பார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், "ராகுலின் இத்தாலி பயணம் தனிப்பட்டது இதனை தவறாக வதந்தி பரப்ப வேண்டாம்" என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.



Source - Maalai malar

Similar News