சித்தார்த் போட்ட ஆபாச ட்விட்டர் பதிவிற்கு பாய்ந்தது புகார் - எந்நேரத்திலும் பாலியல் வழக்கு பாயலாம்
அவ்வபோது கருத்துக்கள் கூறுகின்றேன் என்ற பெயரில் காமெடி செய்து வரும் நடிகர் சித்தார்த் கூறிய தப்பான வார்த்தைகளால் தற்பொழுது அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
சமூகத்திற்கு கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் உண்மை தெரியாமல் அடிக்கடி உளறிவருபவர் நடிகர் சித்தார்த், இதனால் சமூக வலைதளங்களில் இவரை எதிர்த்து களமாடுபவர் அதிகம். இருந்தாலும் தனது அதிகப்பிரசங்கி தனமான ட்விட்களால் அவ்வபோது சர்ச்சைகளை ஏற்படுத்துவார். தற்பொழுது சித்தார்த் ட்விட் ஒன்று வழக்கு வரை சென்றுள்ளது.
விளையாட்டு வீராங்கணை சாய்னா நெய்வால் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் பாதுக்காப்பில் குளறுபடி விவகாரம் தொடர்பாக "அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்" என ட்விட் செய்திருந்தார். அவர் கருத்தை அவர் பதிவு செய்கிறார் என சித்தார்த் விடாமல் அதிகப்பிரசங்கிதனமாக தன் பங்கிற்கு அதனை குறிப்பிட்டு ட்விட் செய்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் வரை சென்றுள்ளது.
இது தேசிய மகளிர் ஆணையம் மகாராஸ்டிரா டி.ஜி.பி'க்கு எழுதியுள்ள கடிதத்தில் பெண்களை இழுவுபடுத்தும் விதமாக விளையாட்டு வீராங்கணை சாய்னா'விற்கு நடிகர் சித்தார்த் ட்விட் செய்துளதற்கு இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 354 ஏ ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக எழுதப்பட்டுள்ளது.