"எனக்கு அமைச்சர் பதவியே பார்க்கமுடியவில்லை நான் ரொம்ப பிஸி" - பி.டி.ஆரின் விளக்க கடிதம்

Update: 2022-01-21 11:00 GMT

எனக்கு அமைச்சர் பதவியில் அலுவல்கள் அதிகம் இருப்பதால் தி.மு.க'வின் ஐ.டி விங்க் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிக்கை விடுத்துள்ளார்.


சமீபத்தில் தி.மு.க'வின் ஐ.டி விங்க் செயலாளர் பதவியில் இருந்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா அவர்களை அந்த பதவியில் அமர வைத்தது தி.மு.க தலைமை, அதுவரை ஏதும் கருத்து கூறாமல் இருந்து வந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதவியை தி.மு.க தலைமை ஒரு அமைச்சரிடம் இருந்து பிடுங்கியது மக்களிடத்தில் பி.டி.ஆரின் மதிப்பு குறையும் என்பதால் தற்பொழுது இதற்காக வலிய வந்து அறிக்கை அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பொறுப்பிலிருந்து நான் விலகியது குறித்து வருத்தத்தையும், இதுவரை நான் ஆற்றிய பணிக்கு நன்றியையும், எனது எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துக்களையும் பலரும் வெளிப்படுத்தி வருகிறீர்கள். நான் அக்கறை செலுத்திய பலரும் இன்றும் என் மீது அன்பு கொண்டுள்ளனர் என்பதை பார்க்கும்போது, நான் உண்மையில் பெரும் பாக்கியம் பெற்றிருக்கிறேன் என்பதை உணர்கிறேன்.

எனது இந்த பொறுப்பு விலகல் குறித்து யாரும் வருந்த வேண்டாம் எப்படி பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான உறவானது எக்காலமும் நீடித்திருக்கிறதோ, அதே போல நமது பிணைப்பும் நிரந்தரமானது. 2017ம் ஆண்டு ஜூன் மாதம், ஆரம்பத் திட்டம் கூட இல்லாத நிலையிலிருந்து இன்று தனித்துவம் மிக்க வலுவான ஒரு அணியை கட்டமைத்து வழிநடத்திய ஒருவராய் நான் என்றுமே தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் ஓர் அங்கமாகவே இருப்பேன், இந்த அணியும் என் வாழ்வின் ஓர் அங்கமாக இருக்கும் என்றும், எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி" என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது எனக்கு அமைச்சர் பதவியில் உள்க பணிகளுக்கே நேரம் செலவிட இயலவில்லை எனவும் பெயரளவில் கட்சி பதவியை வைத்திருக்க விரும்பவில்லை எனவும் அவரின் கடிதத்தில் உணர்த்தியிருக்கிறார். அப்படி கட்சி பணியை விட அமைச்சர் பதவி முக்கியம் என்பவர் ஏன் அதனை அமைச்சராகி ஆறு மாதமாக கூறாமல் இருந்தார் என்பது கேள்வியாகவும், கட்சி தலைமை அறிவித்த பிறகு விளக்க கடிதம் தருவது தன்னிடம் இருந்து பதவியை பறித்ததை காட்டி கொள்ள வேண்டாம் என்பது போலவும் இருக்கிறதாக தெரிகிறது. தி.மு.க'வின் உட்கட்சி பூசல் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை என்ற நிலையிலும் பூதாகரமாக வெடித்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது.


Source - Junior Vikatan

Similar News