"டெல்லி கேட் பகுதியில் நேதாஜி சிலை!" - மோடி அரசுக்கு நன்றி தெரிவித்த நேதாஜி'யின் மகள்

Update: 2022-01-22 09:45 GMT

"இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை வைப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது தாமதமான முடிவு என்றாலும் சிறந்த முடிவு" என மத்திய அரசின் முடிவை பற்றி நேதாஜி'யின் குடும்பத்தினர் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளனர்.


தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு சிலை நிறுவப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உண்மையான தேசியவாதிகள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்தத வீரர் நினைவாக அவருக்கு வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ள உதவும் வகையில் புகழ் சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளது பல நேர்மறையான விமர்சனங்களை மத்திய அரசின் மீது ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து நேதாஜி அவர்களின் மகள் அனிதா போஸ், பேரன்கள் சுகதா போஸ் மற்றும் சந்திர குமார் போஸ் ஆகியோர் இதுகுறித்து பாராட்டியுள்ளனர். இது தொடர்பாக நேதாஜியின் மகள் அனிதா போஸ் கூறியுள்ளதாவது, "இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது, இந்தியா கேட் நல்ல இடம் இவ்வளவு முக்கியமான இடத்தில் சிலை வைப்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சிதான். திடீரென இந்த அறிவிப்பு வந்தது எனக்கு மகிழ்ச்சிதான் எனினும் ஆச்சர்யமாக உள்ளது. எனினும் இதை முன்பே செய்திருக்கலாம். இருப்பினும் தாமதம் என்றாலுமே சிறந்த முடிவு" என கூறியுள்ளார். சுதந்தரம் அடைந்து இத்தனை ஆண்டுகாலம் ஆண்ட காங்கிரஸ் செய்ய முடியாததை மோடி அரசு செய்துளதை நினைத்து நேதாஜி'யின் குடும்பம் பெருமை படுகிறது.


Source - Maalai malar

Similar News