மதமாற்ற கொடுமையால் மாணவி தற்கொலை விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் - ஹெச்.ராஜா அதிரடி

Update: 2022-01-23 09:15 GMT

மதமாற்ற கொடுமையால் சிறுமி இறந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது, "17 வயது மாணவியை பெற்றோர் முன்னிலையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இவர் மறுக்கவே பல்வேறு கீழ்த்தரமான வேலைகளை செய்ய சொல்லி அந்த மாணவியை நிர்பந்தம் செய்து இருக்கிறார்கள். அந்த மாணவி விஷம் குடித்து இறந்து இருக்கிறார். மாஜிஸ்திரேட்டு வாக்கு மூலம் பெற்ற வீடியோ வெளிவரவில்லை.

விசுவ இந்து பரிஷத் அமைப்பு நிர்வாகி, அந்த மாணவியை பார்க்க சென்ற போது, அந்த மாணவி சொன்ன விஷயத்தை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார். மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு வாரத்தில் இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

இறப்புக்கு காரணம் என்ன? என்று விசாரணைக்கு பிறகுதானே முடிவுக்கு வர முடியும். ஆனால் மத மாற்ற பிரச்சனை இல்லை என போலீஸ் சூப்பிரண்டு பேட்டி அளித்துள்ளார். எனவே சி.பி.ஐ விசாரணை மட்டுமே உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கும் ஆகவே இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும்" என ஹெச்.ராஜா பேசினார்.


Source - தினத்தந்தி





 


Similar News