"மதமாற்ற கொடுமையால் இறந்த மாணவி மரணத்திற்கு இரங்கல் செய்தி யாரும் எழுதி தரவில்லையா முதல்வரே?" - ஸ்டாலினை கேட்கும் குஷ்பு

Update: 2022-01-23 09:15 GMT

"மதமாற்றம் கொடுமையால் இறந்த சிறுமி குறித்து இரங்கல் தெரிவிக்க யாரும் முதல்வருக்கு எழுதி தரவில்லை என நினைக்கிறேன்" என பா.ஜ.க'வின் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

மதமாற்ற கொடுமையால் தஞ்சையில் 17 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இறந்தி சிறுமிக்கு நியாயம் கேட்டு பா.ஜ.க களம் இறங்கியுள்ளது. சென்னையில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் பா.ஜ.க சார்பில் நடந்தது.

இதில் கலந்துகொண்ட பா.ஜ.க'வை சேர்ந்த குஷ்பு பேசியதாவது, "சிறுமியை மதம் மாற சொல்லி பள்ளி நிர்வாகத்தினர் தொல்லைகள் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சிறுமி வீடியோவில் பேசியுள்ளார். கட்டாய மதமாற்றம் செய்ய சொல்லி கொடுமை படுத்தியதால்தான் சிறுமி தற்கொலை செய்துள்ளார்.

ஆனால் மரணத்திற்கு காரணமாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் இதற்கு வாய் திறக்காமல் உள்ளார். இதில் உண்மை உள்ளது அவருக்கு தெரியும்.

மாணவியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம், அவரின் மரணத்திற்கு ஒரு கண்டனம், இரங்கல் கூட தெரிவிக்காமல் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். அவருக்கு யாரும் பேப்பரில் எழுதி தரவில்லை என நினைக்கிறேன்.

தி.மு.க கூட்டணி கட்சிகள் வாய் திறக்காமல் உள்ளது. கேள்வி கேட்கும் தைரியம், துணிச்சல் பா.ஜ.க'விற்கு மட்டுமே உள்ளது" என குஷ்பு பேசினார்.


Source - தினமலர்





 


Similar News