'உள்ளாட்சி தேர்தல் இடம்தான் டார்கெட்' - மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் தேர்தலை குறிவைக்கும் காங்கிரஸ்!

Update: 2022-01-24 09:45 GMT

"நடைபெற விருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க'வுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கான இடங்களை கேட்டு பெறுவோம்" என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். பா.ஜ.க போன்ற கட்சிகள் தமிழக மக்களின் பிரச்சினைக்கு குரல் கொடுத்து களத்தில் நிற்க காங்கிரஸ் கட்சியோ தேர்தல் இடங்களை குறிவைத்து பேசும் நிலையில் உள்ளது மக்கள் மீதான காங்கிரஸ் கட்சியின் அக்கரையை காட்டுவதாக உள்ளது.

தமிழகத்தில் மீதமுள்ள நகராட்சி இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 649 நகர்ப்புற அமைப்புகளில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கான தேதியை இன்னமும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

இதற்கிடையில் மற்ற கட்சிகள் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இயங்கும் வேளையில், காங்கிரஸ் கட்சியோ களம் காணாமல் நேரடியாக உள்ளாட்சி தேர்தல் கனவில் மிதக்க துவங்கியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், "நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியில் இதுவரை 15 ஆயிரம் பேர் விருப்பமனு அளித்துள்ளனர். தேர்தர் தேதி அறிவித்தவுடன் தி.மு.க'வுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கான தொகுதிகளை கேட்டு பெறுவோம்" என கூறியுள்ளார்.

தமிழக மக்கள் பிரச்சினைகள், மாணவி மதமாற்றத்தால் தற்கொலை என பல இடங்களில் மக்கள் பிரச்சினைகள் வெடிக்கும் வேளையில் எதையும் கண்டுகொள்ளாமல், களம் காணாமல் நேரடியாக உள்ளாட்சி தேர்தலுக்கு காங்கிரஸ் களம் காண கனவு காண்பது மக்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.


Source - Junior Vikatan

Similar News