தமிழகத்தின் தற்போதைய தேவை கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் - தீர்க்கமாக கூறும் அண்ணாமலை

Update: 2022-01-24 09:45 GMT

தமிழகத்தில் மீண்டும் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


தஞ்சை மைக்கேல்பட்டியில் 17 வயது பள்ளி மாணவி மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ.க இறந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க போராடி வருகிறது. இந்நிலையில் இதற்கு தீர்வு கட்டாய மதமாற்ற தடைச்சட்டமே என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், "இறந்தவர் சடலத்தை வைத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து மக்களை திசை திருப்பும் எண்ணம் பா.ஜ.க'விற்கு இல்லை. மாணவி லாவண்யா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மதம் மாற சொல்லி வற்புறுத்திய ராகேல் மேரி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் கட்டாய மத மாற்ற தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை" என குறிப்பிட்டுள்ளார்.


Source - தினமணி

Similar News