"அனிதாவிக்கு கூச்சல் போட்டீங்களே இப்ப எங்க காணோம்?" - ஹெச்.ராஜா சுளீர்

Update: 2022-01-25 11:30 GMT

"அனிதா'விற்கு கூச்சலிட்டவர்கள் இப்பொது எங்கே?" என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.



சென்னை கமலாலயத்தில் பேசிய ஹெச்.ராஜா கூறியதாவது, "தமிழகத்தில் நடந்திருக்கும் மூன்று, நான்கு சம்பவங்கள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. லாவண்யா என்ற பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய சொல்லி கொடுமைப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 'சிறுமி விவகாரத்தில் மதமாற்ற பிரச்சினை இல்லை என எஸ்.பி கூறியுள்ளார். அவரை சஸ்பெண்ட செய்ய வேண்டும்.


காஞ்சிபுரத்தில் உள்ள ஆண்டர்சன் பள்ளியில் திருநீறு, ருத்திராட்சம் அணிந்திருப்பது ரவுடி போல் இருப்பதாக கூறி சகோதரர்களை ஆசிரியர்கள் அவமானப்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது அப்பொழுதுதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த மாணவியை இழந்திருக்க மாட்டோம். தமிழகத்தில் அனிதாவிற்கு கூச்சலிட்டவர்கள் இப்பொழுது எங்கே போனார்கள்?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.



Source - Asianet NEWS

Similar News