'இந்தி படிப்பதை நாங்கள் தடுக்கவில்லை' - நீதிமன்றத்தில் தி.மு.க அரசு அடித்த பல்டி
'இந்தி படிப்பதை நாங்கள் தடுக்கவில்லையே' என நீதிமன்றத்தில் தி.மு.க அரசு பல்டியடிக்கும் விதமாக பேசியுள்ளது.
கடலூரை சேர்ந்த 'ஆலமரம்' என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அர்ஜுனன் இளையராஜா என்பவர் 'மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழி திணிப்பு என்பதை காரணம் காட்டி அரசியலுக்காக இங்கு ஆளும் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. அந்நிய மொழியான ஆங்கிலத்தை அனுமதிக்கப்படும் போது நாட்டின் அலுவல் மொழியான இந்தியை எதிர்ப்பது சட்ட விரோதமாகும். கல்விதரத்தை மேம்படுத்தும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகம் செயல்படுவது மாநிலத்தை கல்வியில் பின்தங்க செய்துவிடும் என்பதால் தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கை 2020 அமல்படுத்த வேண்டும் என வழக்கு தொடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி முணீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, இந்தி படிக்கும் வாய்ப்பு இல்லாமல் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அரசு மக்கள் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் என்றனர்.
மேலும் மும்மொழி கொள்கையை என்ன சிரமம் எனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அட்வகேட் ஜெனரல், இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை, தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை பின்பற்றுவதே கொள்கை என தெரிவித்தார்.
இதற்கு மேலும் 4 வாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.