"சமூகநீதிக்கு நீங்கள் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை ஸ்டாலின் அவர்களே!" - போட்டுத் தாக்கும் நாராயணன் திருப்பதி

Update: 2022-01-27 12:00 GMT

பா.ஜ.க உருவாக்கிய நிலைநாட்டிய சமூகநீதிக்கு எந்த சோதனையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தால் அதுவே தி.மு.க'வின் சாதனை தான் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும் என பா.ஜ.க'வின் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பா.ஜ.க'வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூகநீதி மக்களுக்கு சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் சட்டசபையிலும் நீதிமன்றத்தில் நடத்திய போராட்டங்களின் வழியே இந்த சாதனையை பெற்றிருக்கிறோம் என தமிழக முதல்வர் கூறியுள்ளார் ஆம் உண்மை தான் மக்கள் மன்றத்தில் அளித்த தீர்ப்பினால் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களும் அத்வானியும் அமைச்சர்களாக இருந்த எங்கள் பாரதிய ஜனதா ஆட்சியில்தான் (1977-79) மண்டல் ஆணையம் நியமிக்கப்பட்டது.

1989'ல் பாராளுமன்ற தேர்தலில் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் ஆணையை பரிந்துரையை அமல்படுத்துவோம்' என்று தேர்தல் வாக்குறுதி அளித்த ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சிதான் தி.மு.க'வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி பாராளுமன்றத்தில் இந்த இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து ஒன்றரை மணி நேரம் உரையாடியது குறிப்பிடத்தக்கது அரசியல் அதிகாரத்திற்காக சமூகநீதியை 10 வருடங்கள் குழிதோண்டிப் புதைத்து தி.மு.க காங்கிரஸ் கூட்டணி என்பதே உண்மை.


2016'ல் சலோனி குமாரி வழக்கில் "மருத்துவ படிப்பு அனுமதியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வழங்க தயாராக உள்ளோம் உத்தரவிடுங்கள்" என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பா.ஜ.க அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அடிப்படையிலேயே கடந்த வருடம் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு குழுவினை அமைத்து இட ஒதுக்கீட்டின் விழுக்காட்டு உறுதி செய்ய சொன்னது. அதனடிப்படையில மத்திய பா.ஜ.க அரசு குழு அமைத்து அந்தக் குழு பரிந்துரையின் பேரில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை உத்தரவிட்டு உறுதிசெய்தது பா.ஜ.க அரசு.

எனவே இட ஒதுக்கீட்டை இந்திய அளவில் மக்கள் மன்றத்திலும் பாராளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் உறுதி செய்தது பா.ஜ.க'தான் என்பதையும் யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக்கான போராட்டத்தில் தி.மு.க ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பது நாடறிந்த உண்மை ஆகவே தி.மு.க பெருமை தேடிக் கொள்வதை கைவிட்டு பா.ஜ.க உருவாக்கித் தந்த சமூகநீதிக்கு எந்த சோதனையும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.



Source - Asianet NEWS

Similar News