தஞ்சை சிறுமி தற்கொலை விவகாரம் - தேசிய குழந்தை உரிமைகள் ஆணையத்தின் விசாரணையில் கல்வி அலுவலர்கள்

Update: 2022-01-31 11:15 GMT

மதமாற்று கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட தஞ்சை மாணவி லாவண்யா'விற்காக மாவட்ட கல்வி அலுவலரிடம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் மைக்கேல் பட்டி என்னும் ஊரில் மதம் மாறச் சொல்லி கொடுமைப்படுத்தியதாக லாவண்யா என்னும் சிறுமி மரண வாக்குமூலம் வீடியோவில் அளித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இந்த விவகாரத்தை கையிலெடுத்த தமிழக பா.ஜ.க, அண்ணாமலை தலைமையில் பல போராட்டங்களை செய்தது. இறந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க வீதியில் இறங்கி பா.ஜ.க போராடியது.


இந்தப் போராட்டத்தை தடுக்க ஆளும் தரப்பு அதிகம் முயன்றும் முடியவில்லை, இந்நிலையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த விசாரணையில் இறங்கியுள்ளது.


இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்கா கனூப், மருத்துவர் ஆனந்த் உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழுவினர் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.



Source - Dinamalar

Similar News