"தேர்தல்கள் வரும் போகும் பட்ஜெட் தான் நமக்கு பிரதானம்" - நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் மோடி

Update: 2022-01-31 11:30 GMT

"நாட்டில் அடிக்கடி தேர்தல் நடைபெறுவது நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாதிக்கிறது" என செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறினார்.


2022-23'ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் டெல்லியில் இன்று நாடாளுமன்றத்தில் தொடங்கியது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மின்னணு முறையில் நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இன்று காலை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, "இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இக்கூட்டத்திற்கு வரவேற்கிறேன், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இந்திய வளர்ச்சி பாதையில் ஒரு முக்கியமான பகுதி. இந்தக் கூட்டத்தொடரில் எழுப்பப்படும் அனைத்து விவகாரங்களை பற்றியும் விவாதிக்க மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளது அனைத்து எம்.பி'க்களும் அரசியல் கட்சிகளும் திறந்த மனதுடன் தரமான விவாதங்களை நடத்தி நாட்டை விரைவாக வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வார்கள் என நம்புகிறேன்" என கூறினார்.


தொடர்ந்து பேசிய மோடி, "நாட்டில் அடிக்கடி தேர்தல் நடைபெறுவது பாராளுமன்ற நடவடிக்கைகளை பாதிக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அனைத்து எம்.பி'க்களையும் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன் தேர்தல் வந்து போகும் ஆனால் பட்ஜெட் அமர்வு முழு ஆண்டுக்கான வரைபடத்தை நமக்கு அளிக்கும், இந்த அமர்வை நாம் எவ்வளவு பயனுள்ளதாக மாற்றுகிறோமோ அந்த அளவில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி உயரத்திற்கு கொண்டு செல்லும்" என பிரதமர் மோடி பேசினார்.



Source - Junior Vikatan

Similar News