நாயுடுமங்கலத்தில் அகற்றப்பட்ட அக்னி கலசம் - இரண்டு நாட்களாக போராடும் வன்னியர் சமுதாய மக்கள்

Update: 2022-01-31 11:30 GMT

திருவண்ணாமலை அருகே வன்னியர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அக்னி கலசம் இரவோடு இரவாக அகற்றப்பட்டதால் பா.ம.க'வினர் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையில் வன்னியர்களின் அக்னி கலசம் சிலையாக வைக்கப்பட்டிருந்தது, இதைத்தொடர்ந்து சர்ச்சையானதை தொடர்ந்து இரவோடு இரவாக அந்த அக்னி கலசம் அகற்றப்பட்டது. இதனை கண்டித்து வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி தலைமையில் நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையில் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் பெரிய அளவில் பா.ம.க'வினர் கலந்து கொண்டனர்.


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அக்னி கலசத்தை ஏற்கனவே இருந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் "அமைதியை உருவாக்க வேண்டிய வருவாய் துறை அதிகாரிகள் எல்லா மக்களும் அமைதியாக நன்றாக வாழ்வதற்கு அமைதியான சூழ்நிலையில் உருவாக்காமல் இங்கே இருந்த அக்னி கலசத்தை இரவோடு இரவாக திருடர்களை போல் எடுத்துச் சென்று விட்டார்கள் எனவே மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அக்னி கலசம் ஏற்கனவே இருந்த இடத்தில் வைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.


சம்பவம் நடந்து இரண்டு நாட்களாகியும் திருவண்ணாமலையில் போராட்டம் நடந்து வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.


Source - Asianet NEWS

Similar News