"தி.மு.க ஒத்து வரலைன்னா தனியா தான் போட்டியிடனும்" - கொதிக்கும் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ்

Update: 2022-02-01 12:45 GMT

"தி.மு.க உடன் எவ்வளவு இறங்கி பேசியாச்சு ஆனால் எங்களை மதிக்கவில்லை" என கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர் தி.மு.க'விற்கு எதிராக.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் 3 தொகுதியை காங்கிரஸ் தன்வசம் வைத்துள்ளது, இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்த்த காங்கிரஸார் தற்பொழுது அது இல்லை என தெரியவரும் நிலையில் தி.மு.க'வின் அலட்சியத்தால் கோபமடைந்துள்ளனர்.


இதுகுறித்து காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி.உதயம் கூறியதாவது, "கிழக்கு மாவட்டத்தில் 6 பேரூராட்சிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன, நெய்யூர் பேரூராட்சியுடன் 7 இடங்கள் காங்கிரசுக்கு வேண்டும் என கேட்டுள்ளோம், அதற்கு தி.மு.க உடன்பட வேண்டும் இல்லை எனில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம்" என்றார்.


மேலும் இது தொடர்பாக மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர்.பினுலால் சிங் கூறும்போது, "பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது நாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்காமல் இருந்தால் அந்தந்த இடங்களுக்கு தகுந்த வகையில் நாங்கள் போட்டியிடுவோம்" என கூறியுள்ளார்.


மேலும் இதுகுறித்து கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் கூறும்பொழுது, "தமிழ்நாட்டில் மாநகராட்சிகளில் ஒரு சீட் கூட காங்கிரஸ் நிர்ணயம் செய்யவில்லை அது போல் எந்த நகராட்சியும் நிர்ணயம் பண்ண வில்லை எங்கள் பொது எதிரியான பா.ஜ.க'வை வீழ்த்துவதற்காக தி.மு.க'வுடன் எவ்வளவோ இறங்கி சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம் ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமாக பார்க்கும்போது 25% இடம் கூட எங்களுக்கு கொடுக்கவில்லை நாங்கள் கேட்டதற்கும் தி.மு.க தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை எனவே தனியா போட்டியிட தயாராகி வருகிறோம்" என்றார் அவர்.


Source - Junior Vikatan

Similar News