"திமுக உடன் சேர்ந்து தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு இப்பொழுது நாடகமா?" ராகுல்காந்திக்கு ஜெயக்குமார் பதிலடி

Update: 2022-02-03 11:45 GMT

"தமிழ் இனத்தை கொன்று விட்டு தன்னை தமிழன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்" என ராகுல் காந்திக்கு பதிலடி தரும் விதமாக ஜெயக்குமார் காட்டமாக பதில் அளித்துள்ளார்.


நேற்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது 'நான் தமிழன்' என ராகுல் காந்தி குறிப்பிட்டதற்கு அ.தி.மு.க'வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "தமிழன் தமிழன் என சொன்னால் ராகுல்காந்தி தமிழன் ஆகி விடுவாரா?" என்றார்.


மேலும் பேசிய அவர், "ராகுல்காந்தி தமிழன் என கூறுவதற்கு முகாந்திரமே இல்லை, தி.மு.க'வுடன் சேர்ந்து தமிழ் இனத்தை அழித்தவர்கள், 1 லட்சம் தமிழர்களின் ஆன்மா இவர்களை மன்னிக்காது. தமிழ் இனத்தையே கொன்று குவித்துவிட்டு தமிழன் என்று கூறினால் நம்ப மாட்டார்கள்" என்றார்.


Source - Junior Vikatan

Similar News