"வட்டி இல்லாமல் பணம் வேண்டுமா வாங்க மதம் மாறுங்க" - தஞ்சையில் மேலும் ஒரு மதமாற்ற சம்பவம்
தஞ்சை அருகே தூய்மைப் பணியாளர்களின் மதம் மாறும் விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஊழியர் ஒருவர் பிரச்சாரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் தஞ்சையில் மைக்கேல் பட்டி என்ற ஊரில் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த 17 வயது பள்ளி மாணவி மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் ஒரு மதமாற்ற விவகாரம் நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் மருத்துவ அதிகாரியிடம் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் பெருமாள், இவர் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி தூய்மை செய்யும் பணியாளர்களிடம் மதம் சார்ந்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர், "எனக்கு மூன்று லட்சம் கொடுத்தால் நாம் அனைவரும் இயேசுவின் பிள்ளைகள், நமக்கு அவரை பிடிக்காததால் தான் நான் கஷ்டப்படுகிறோம் நான் சென்ட்ரிங் வேலை பார்த்தேன் எனக்கு வட்டியில்லாமல் 3 லட்சம் கொடுத்திருப்பதாக" அவர் கூறும் வீடியோ வைரல் ஆகிறது.
நீங்கள் மதம் மாறினால் உங்கள் கஷ்டங்கள் தீர்ந்து விடும் என்ற கிறிஸ்துவத்தின் வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மை பணியாளர்களிடம் மாநகராட்சியை சேர்ந்த அதிகாரியே பணத்தாசை காட்டி மதம் மாற முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. ஏற்கனவே 17 வயது பள்ளி மாணவி கிறிஸ்துவ மதமாற்றம் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதினால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னரே தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் ஒரு மதமற்ற தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.