தாலிபன்கள் ஆதரித்த ஹிஜாப் போராட்டம் - தீவிரவாத பின்னணியா?

Update: 2022-02-10 09:30 GMT

கர்நாடக ஹிஜாப் விவகாரத்திற்கு தாலிபன்களிடமிருந்து ஆதரவு பெருகுவது சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது


கர்நாடகாவில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரும் விவகாரத்தில் இந்தியாவில் மட்டுமின்றி தாலிபன்களிடமிருந்து ஆதரவு பெருகுவது இதன் பின்னணியில் உள்ள சதியை அம்பலப்படுத்துவதாக உள்ளது. சாதாரணமாக பள்ளிகளில் உடை விஷயத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது இயல்பு ஆனால் இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கும் இந்த வேளையில் கர்நாடகத்தில் நடைபெற்ற இந்த விவகாரம் குறித்து சலசலப்புகள் எழுவதும் பின்னர் அது தொடர்பான உலக அளவில் தாலிபன்களிடமிருந்து ஆதரவு குரல் பெருகுவதும் இதன் பின்னணியில் உள்ள சந்தேகத்தை அதிகமாக்குகிறது.


இது தொடர்பான சம்பவங்களை தொடர்புபடுத்திப் பார்க்கும் பொழுது கர்நாடக ஹிஜாப் விவகாரம் நடந்து முடிந்த பிறகு கடந்த வியாழனன்று தாலிபன்கள் கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சிறுமிகளுக்கு தங்கள் ஆதரவை வழங்கினர், மற்றும் கர்நாடக ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய விதிகளுக்கு மாணவிகள் உறுதுணையாக இருப்பதற்கு பாராட்டினார்கள்.


பின்னர், 'இந்திய முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் போராட்டம் செய்வது தங்களின் இஸ்லாமிய மதத்தின் மீதான மதிப்பை காட்டுகிறது' என்று இனாமுல்லா சமாங்கனி ட்விட் செய்துள்ளார் இவர் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் துணை செய்தித்தொடர்பாளர், மேலும் அவர் கூறியதாவது 'ஹிஜாப் விவகாரத்திற்காக இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது' எனவும் கூறியுள்ளார் அவரது டுவிட்டர் பதிவில் கர்நாடக பெண்ணின் படத்தையும் பதிந்து ட்விட் செய்துள்ளார்.


இப்படி உலகின் பல நாடுகள் தடை செய்த ஒரு தாலிபன் இயக்கம் இந்தியாவில் நடக்கும் ஹிஜாப் விவகாரத்திற்கு ஆதரவு அளித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.



Source - OpIndia

Similar News