கர்நாடகத்தில் தேசிய கொடியை அவமதித்ததாக பொய்யான தகவலை கனிமொழி எம்.பி பரப்பியது பரபரப்பாகியுள்ளது.
கர்நாடக ஹிஜாப் விவகாரத்தில் அங்குள்ள மாணவர்கள் காவி துண்டு அணிந்து போராடி வருகின்றனர், இந்த நிலையில் ஒரு கல்வி வளாகத்தில் மாணவர்கள் அங்குள்ள கொடி ஏற்றப்படாத கொடிக்கம்பத்தில் மீது காவி கொடியை ஏற்றினர். இதனை தமிழகத்தில் பெரும்பாலான மீடியாக்கள் 'தேசிய கொடியை அகற்றி விட்டு காவி கொடியை ஏற்றினார் மாணவர்கள்' என்பது போல் செய்திகளை பரப்ப முயற்சித்தனர்.
இந்த நிலையில் தி.மு.க'வின் எம்பியும் முதல்வர் ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் 'தேசிய கொடியை அவமதிக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது இனி இதுதான் தேசியம் தேசிய கொடி எல்லாம் என்பார்களா என்ன?' பதிவிட்டுள்ளார். அந்தக் கொடி கம்பத்தில் தேசியக்கொடி இல்லை என்பதை கர்நாடகா சிவமொக்கா மாநிலத்தில் உள்ள காவல்துறை எஸ்.பி அறிவித்துள்ளார். இந்நிலையில் அந்த கொடி கம்பத்தில் தேசியக்கொடி இருந்தது போலவும் அதனை அகற்றிவிட்டு மாணவர்கள் காவி கொடியை ஏற்றினார்கள் என்பது போலவும் தி.மு.க எம்பி கனிமொழி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இப்படித்தான் தமிழகத்தில் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுகின்றன குறிப்பாக ஹிஜாப் விவகாரத்தில் பா.ஜ.க காவி துண்டு மூலமாக கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறது என்பதுபோல் மக்களிடம் பரப்ப தி.மு.க முயற்சிக்கிறது.